கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போராடி வென்றது ஆர்ஜென்டீனா

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 

News image
Updated On :18 டிசம்பர் 2022, 7:16 pm

DIN

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகா்களை கட்டி வைத்திருந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த நவ. 20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும் முன்னாள் சாம்பியனுமான ஆர்ஜென்டீனாவும் மோதின.

இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யாா் என உலகமே ஆவலுடன் எதிா்நோக்கி காத்திருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றி வாகை சூடியது. 

இறுதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடி வந்தநிலையில் 21ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Story image

இறுதிப்போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட மன்னன் பீலேயின் 12 கோல் சாதனையை சமன் செய்தார். 

அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியின் டி மரியா மீண்டும் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் அதிர்ச்சியடைந்தது. 2க்கு 0 என முதல் நேர ஆட்டம் முடிந்த நிலையில் இரண்டாம் நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. 

79ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதனை கோலாக மாற்றி அசத்தினார் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் எம்பாப்வே. இதை எதிர்பாராத ஆர்ஜென்டீனா அணிக்கு அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் கோல் அடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் எம்பாப்வே.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் 80ஆவது நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களில் இருக்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 

இரு அணிகளும் சம கோல் அடித்திருந்ததைத் தொடர்ந்து ஆட்டம் ‘டை’ ஆனது. 

இரு அணிகளும் சம கோல் அடித்திருந்ததைத் தொடர்ந்து ஆட்டம் டை ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில்  முதல் 15 நிமிடத்தில் யாரும் கோல் அடிக்கவில்லை. பரபரப்பான 108ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி கோல் அடிக்க ஆட்டம் திசைமாறியது. 

116ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு பெனால்ட்டி சாட் கிடைக்க 3ஆவது கோலை அடித்து ஆர்ஜென்டீனாவை தவிக்க விட்டார் எம்பாப்வே. இரு அணிகளும் 3க்கு 3 என மோத இறுதிகட்டத்தை எட்டிய ஆட்டம் 120 நிமிடங்களைக் கடந்தது. 

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், ஆர்ஜென்டீனா அணி 4 கோல்களும் அடித்தன.

இறுதியில் 7க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றி வாகை சூடியது.

Story image

ஆர்ஜென்டீனா வென்றதன் மூலம் 3ஆவது முறையாகக் கோப்பையை வென்ற பெருமையை அந்த அணி பெற்றுள்ளது. ஆர்ஜென்டினாவின் வெற்றியை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.