தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்?

ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

இங்கிலாந்து வீரர்களுடன் சில்வர்வுட் (வலது)

Updated On :2 பிப்ரவரி 2022, 9:19 am

DIN

ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியால் அவ்விருவரையும் நீக்கிவிட்டு தற்காலிகப் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்டை ஈசிபி நியமிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிய தெ.ஆ. முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளதால் அடுத்த சில வாரங்களில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மார்ச் 8 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அடுத்த வாரம் தேர்வு செய்யப்படும். பிப்ரவரி 24 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு இங்கிலாந்து வீரர்கள் புறப்படுவார்கள். ஒருவேளை, பயிற்சியாளர் பதவியிலிருந்து சில்வர்வுட் நீக்கப்பட்டால் அலெக் ஸ்டூவர்ட் இங்கிலாந்து அணியின் தற்காலிகப் பயிற்சியாளராகப் பணிபுரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.