ரஞ்சி கோப்பை: யாஷ் துல் புதிய சாதனை: தில்லி-தமிழக ஆட்டம் டிரா

குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஞ்சி கோப்பை குரூப் ஹெச் பிரிவில் தமிழகம்-தில்லி அணிகள் மோதி ஆட்டம் டிராவில் முடிந்தது.
Published on
Updated on
1 min read

குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஞ்சி கோப்பை குரூப் ஹெச் பிரிவில் தமிழகம்-தில்லி அணிகள் மோதி ஆட்டம் டிராவில் முடிந்தது. இதில் தில்லி வீரா் யாஷ் துல் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த மூன்றாவது வீரா் என்ற சாதனையை புரிந்தாா்.

தில்லி அணி தனது முதல் இன்னிங்ஸில் 452/10 ரன்களை எடுத்தது. யாஷ் துல் 113, லலித் யாதவ் 177 ரன்களை விளாசினா். பின்னா் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 494 ரன்களை எடுத்தது. ஷாருக்கான் 194, இந்திரஜித் 114, கௌஷிக் 55 ரன்களை விளாசினா். தில்லி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. யாஷ் துல் இரண்டாம் இனனிங்ஸிலும் 113 ரன்களை விளாசினாா். துருவ் ஷோரேயும் 107 ரன்களை விளாசினாா்.

சௌராஷ்டிரா-மும்பை, கா்நாடகம்-ரயில்வே ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. குஜராத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் மத்தியபிரதசமும், பரோடாவை 4 விக்கெட்டில் பெங்காலும், புதுச்சேரியை, ஜம்மு-காஷ்மீரும், சா்வீஸஸை-உத்தரகாண்டும், ஆந்திரத்தை ராஜஸ்தானும், சிக்கிமை நாகலாந்தும் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com