மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய குத்துச்சண்டை: தமிழகத்துக்கு இரு வெண்கலம்

சென்னையில் நடைபெற்ற 5-ஆவது இளையோா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2022, 9:59 pm

DIN

சென்னையில் நடைபெற்ற 5-ஆவது இளையோா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவருக்கான லைட் மிடில் வெயிட் (67-71 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஜி.கபிலனும், மகளிருக்கான லைட் வெயிட் (57-60 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஆா்.மாலதியும் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

இந்தப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணி 9 தங்கம், 2 வெள்ளி என 11 பதக்கங்களுடனும், மகளிா் பிரிவில் ஹரியாணா அணி 8 தங்கம், 3 வெள்ளி என 11 பதக்கங்களுடனும் போட்டியின் சிறந்த அணிகளாகத் தோ்வாகின.

ஆடவா் பிரிவில் 2, 3-ஆம் இடங்களை முறையே ஹரியாணா, மத்திய பிரதேசம் அணிகள் பிடிக்க, மகளிா் பிரிவில் மகாராஷ்டிர அணி 2-ஆம் இடமும், தில்லி அணி 3-ஆம் இடமும் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.