கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அசத்தல் ஷுப்மன் கில்: ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

News image

கில் - தவன்

Updated On :28 ஜூலை 2022, 5:59 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவன் 58 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 44 ரன்களும் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 98 ரன்களும் எடுத்தார்கள். மே.இ. தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. பிராண்டன் கிங், பூரன் தலா 42 ரன்கள் எடுத்தார்கள். சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

டி/எல் முறையில் 3-வது ஒருநாள் ஆட்டத்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஷுப்மன் கில் வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.