கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் காலமானார்

இங்கிலாந்தின் 90 வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார்.

News image

படம் : சசெக்ஸ் கிரிக்கெட் அருங்காட்சியகம்| ஜிம் பார்க்ஸ்

Updated On :1 ஜூன் 2022, 7:23 am

DIN

இங்கிலாந்தின் 90 வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார். 

சசெக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர் ஜிம் பார்க்ஸ். அவர்தான் இங்கிலாந்து நாட்டின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்து வந்த கிரிக்கெட் வீரர். தனது வீட்டில் கீழே விழுந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு (மே-31) காலமானார். 

1930இல் பிறந்த ஜிம் 18வயதில் சசெக்ஸ் அணிக்காக விலையாட ஆரம்பித்தார். 739 முதல்தர ஆட்டங்களை வெற்றிகரமாக விளையாடினார். 
அவர் முதலில் லெக்ஸ்பின்னர் பேட்ஸ்மேனாக ஆரம்பித்தார். பிறகு விக்கெட் கீப்பராக மாறி இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் முதல்தர போட்டிகளில் 36000 ரன்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு அதிரடியான ஆட்டக்காரர். அவர் ஏராளமான புதிய ஷாட்களை அடிக்ககூடியவர். ‘ஸ்லாக் ஸ்வீப்’ எனப்படும் முட்டிப்போட்டுக்கொண்டு அடிக்கும் ஷாட்டை உருவாகியவரும் இவரே ஆவார். 

சசெக்ஸ் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்ததாவது: 

90 வயதில் இறந்த ஜிம் பார்க்ஸ்க்கு சசெக்ஸ் கிரிக்கெட் அணி மிகவும் வருத்தம் தெரிவிக்கிறது. ஒரு வாரம் முன்பு வீட்டில் கீழே விழுந்ததால் வொர்திங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது காலமானார். அவர்தான் இங்கிலாந்தின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்துவந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர். அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கு அழ்ந்த அனுதாபங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.