கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

துப்பாக்கி சுடுதல்: இந்தியா 2-ஆம் இடம்

அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

News image
Updated On :4 ஜூன் 2022, 9:19 pm

DIN

அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. இந்திய போட்டியாளா்கள் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இதில் வென்றுள்ளனா்.

இப்போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை நடைபெற்ற 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்/ஆஷி சௌக்சி கூட்டணி பங்கேற்றிருந்தது. முதல் நிலையில் 900-க்கு 881 புள்ளிகளும், 2-ஆம் நிலையில் 600-க்கு 583 புள்ளிகளும் பெற்றது இந்திய இணை. பின்னா் இறுதிச்சுற்றில் கடும் சவால் அளித்த உக்ரைனின் சொ்ஹி குலிஷ்/டரியா டைகோவா கூட்டணியை 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வசமாக்கியது ஸ்வப்னில்/ஆஷி ஜோடி.

இப்போட்டியில் ஸ்வப்னிலுக்கு இது 3-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே தனிநபா் 3 பொசிஷன்ஸ், அணிகள் 3 பொசிஷன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் அவா் வெள்ளி வென்றிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.