நெதர்லாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் பீட்டர் சீலார் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
34 வயதான பீட்டர் சீலார் 2006 முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணியில் முக்கிய பங்காற்றினார். 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 57 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை எகானமி 6.83 என்ற விதத்தில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கில் 591 ரன்களையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்துள்ளார்.
2009,2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த நெதர்லாந்து அணியில் இடம் பெற்றவர் சீலார் என்பது குறிப்பிடத்தக்கது.
“2020 முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் முடிந்ததை கொடுக்க முடியவில்லை” என பீட்டர் சீலார் கூறினார்.
பீட்டர் சீலாருக்கு அடுத்து நெதர்லாந்தின் விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கேப்டன்சி பொறுப்பை ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



