மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைய இந்த ஸ்கோர் போதுமா?

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 10:00 am

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், டேவிட் ஆகியோர் இடம்பெறவில்லை. ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார். மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸி. அணியில் கிரீன், ஸ்மித், ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

குரூப் 1 பிரிவில் 5 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பு உருவாகும். 

அணியில் சேர்க்கப்பட்ட கிரின், ஸ்மித் ஆகியோர் முறையே 3, 4 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்கள். வார்னர் 25, மிட்செல் மார்ஷ் 45 எடுத்தார்கள். கிளென் மேக்ஸ்வெல், 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆஸ்திரேலியாவின் இந்த ஸ்கோரால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. (ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்தை நெட் ரன்ரேட்டில் பின்னுக்குத் தள்ள முடியும். ஆனால் அதற்குக் குறைவான ஸ்கோரையே ஆஸி. அணி எடுத்துள்ளது.) தற்போது ஆப்கானிஸ்தானை 116 ரன்கள் அல்லது அதற்கும் குறைவான ரன்களில் கட்டுப்படுத்தினால் மட்டுமே இங்கிலாந்தை விடவும் அதிக நெட் ரன்ரேட்டுடன் 2-ம் இடத்துக்கு ஆஸி. அணியால் முன்னேற முடியும். இல்லையென்றால் இலங்கையை வீழ்த்தினாலே போதும், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும். அதாவது இலங்கையை 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் அப்போது 116 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்திய காரணத்துக்காக ஆஸ்திரேலியா 2-ம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.