
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.
உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.
இதுவரை விளையாடிய 4 இன்னிங்ஸில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட்டும் 46.6 தான்.
2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாபர் ஆஸம்:
0(1), 4(9), 4(5) & 6(15)
மேலும் கடந்த 5 டி20 ஆட்டங்களில் அவர் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் பாகிஸ்தான் நிர்வாகம் பாபர் ஆஸம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.