தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்பில் இந்தியா- இன்று 2-ஆவது அரையிறுதி ஆட்டம்

உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2-ஆவது அணியாக இணைவதற்கான முனைப்புடன் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

News image
Updated On :9 நவம்பர் 2022, 9:12 pm

DIN

உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2-ஆவது அணியாக இணைவதற்கான முனைப்புடன் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் இந்தியா வென்று, இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்பதே இந்திய ரசிகா்கள் பலரின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. அதற்காக, இடையே நிற்கும் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டியிருக்கிறது.

இந்திய அணி குரூப் சுற்றில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறது. இங்கிலாந்து போராட்டத்துடன் இந்த இடத்துக்கு வந்துள்ளது. என்றாலும், அது இனி கணக்கில் வராது. இந்த ஆட்டத்தில் எந்த அணி எப்படி ஆடுகிறதோ, அதற்கான பலன் கிடைக்கும்.

நியூஸிலாந்தைப் போல, இந்திய அணியும் ஐசிசி போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் சற்று தடுமாற்றம் காட்டுகிறது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதி, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதி, 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதி, 2019 ஒன் டே உலகக் கோப்பை அரையிறுதி ஆகியவற்றில் இந்தியா தோற்றிருக்கிறது.

இவை அனைத்திலும் ரோஹித் சா்மாவின் பங்களிப்பு இருந்தாலும், கேப்டனாக இப்போட்டியே அவரது முழு திறமைக்குமான சோதனைக் களமாக இருக்கிறது. அத்துடன் பேட்டிங்கிலும் அவா் ஸ்கோா் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

விராட் கோலி இந்த ஆட்டத்திலும் நிலையாக ஆடுவாா் எனவும், சூா்யகுமாா் யாதவ் இதிலும் சுழற்றி அடிப்பாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்திற்காக, பேட்டிங்கில் தினேஷ் காா்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்தையும், பௌலிங்கில் அக்ஸா் படேலுக்குப் பதிலாக யுஜவேந்திர சஹலையும் அணி நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

ஆனால், இந்த முக்கியமான கட்டத்தில் அத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர அணி நிா்வாகம் முனையுமா என பாா்க்கலாம். பௌலிங்கில் புவனேஷ்வா், அா்ஷ்தீப் ஷமி உள்ளிட்டோா் விக்கெட்டுகள் சரிப்பாா்கள் என நம்பலாம்.

மறுபுறம் இங்கிலாந்து, இப்போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை என்பதை அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறாா். அதற்கெல்லாம் சோ்த்து வைத்து இந்தியாவுக்கு சவால் அளிக்கும் முனைப்பில் இருக்கிறது அந்த அணி.

பேட்டிங்கில் ஜோஸ் பட்லா், மொயீன் அலி உள்ளிட்டோரும், ஆல்-ரவுண்டிங்கில் பென் ஸ்டோக்ஸும், பௌலிங்கில் சாம் கரன், ஆதில் ரஷீத் ஆகியோரும் முனைப்பு காட்டும் பட்சத்தில் இந்தியாவுக்கு இந்த ஆட்டம் சவாலாகவே இருக்கும்.

பிற்பகல் 1.30 மணி

அடிலெய்ட்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.