ரோஹித், ராகுல் அவுட்: முதல் 10 ஓவர்களில் நிதானமாக விளையாடிய இந்திய அணி
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் விளையாடுகிறார். இங்கிலாந்து அணியில் மலான், மார்க் வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. பில் சால்ட், ஜோர்டன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ரோஹித் சர்மாவும் கோலியும் சற்று நிதானமாக விளையாடினார்கள். கோலி ஒரு சிக்ஸர் அடித்தார். முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் தான் கிடைத்தது. பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு வேகமாக ரன்கள் எடுக்க நினைத்தார்கள். பவுண்டரிகள் அடித்தாலும் 15, 20 ரன்கள் அடிக்குமளவுக்கு ஒரு பெரிய ஓவர் கிடைக்கவில்லை. 28 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. கோலி 26, சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...