மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலகக் கோப்பை: ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியதால் சவூதி அரேபியாவில் இன்று தேசிய விடுமுறை!

பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2022, 5:06 am

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சி அளித்துள்ளது.

ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா தொடக்க நிமிடங்களிலேயே கோலடித்து முன்னிலை பெற்றாலும், 2-ஆவது பாதியில் திடீரென மீண்ட சவூதி அரேபியா, ஆா்ஜென்டீனா அசந்த நேரம் பாா்த்து 5 நிமிடங்கள் இடைவெளியில் அருமையாக இரு கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் இறுதியில் 2-1 என வென்றது சவூதி அரேபியா. இந்த ஆட்டத்துக்கு முன், தொடா்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த ஆா்ஜென்டீனாவுக்கு, இந்த 37-வது ஆட்டத்தில் தோல்வியைப் பரிசளித்துள்ளது சவூதி அரேபியா.

இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சவூதி அரேபியாவில் இன்று (நவம்பர் 23) தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், அனைத்து அரசு, தனியார் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார். பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1990-ல் ஆர்ஜென்டீனாவை கேம்ரூன் அணி வீழ்த்தியபோதும் அந்நாட்டு அரசு தேசிய விடுமுறையை அளித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.