ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இன்று விளையாடும் ரொனால்டோ, நெய்மர்

இன்று நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில், போர்ச்சுகள் அணிகள் விளையாடுகின்றன.

News image
Updated On :24 நவம்பர் 2022, 8:26 am

DIN

இன்று நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில், போர்ச்சுகள் அணிகள் விளையாடுகின்றன.

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 5-வது நாளன்று 4 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து - கேம்ரூன் அணிகள் மோதுகின்றன. அடுத்த ஆட்டங்களில் உருகுவே - தென் கொரியா, போர்ச்சுகல் - கானா, பிரேசில் - செர்பியா ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா, ஜெர்மனி ஆகிய பெரிய அணிகள் தோல்வியடைந்துள்ளதால் பிரேசில், போர்ச்சுகள் அணிகளின் ஆட்டங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆசியாவில் கடைசியாக உலகக் கோப்பை நடைபெற்றபோது பிரேசில் அணி கோப்பையை வென்றது. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் தரமான அணி பிரேசில் தான் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. 

இன்றைய ஆட்டங்களில் பிரபல வீரர்களான பிரேசிலின் நெய்மர், போர்ச்சுகலின் ரொனால்டோ ஆகியோரின் பங்களிப்பு அதிகக் கவனத்தை ஈர்க்கவுள்ளன. தனது கடைசி உலகக் கோப்பையில் 37 வயது ரொனால்டோ விளையாடவுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ இந்தப் போட்டியில் கவனச்சிதறல் இல்லாமல் விளையாட வேண்டும், கடைசி உலகக் கோப்பையிலாவது அவர் உலகக் கோப்பையைக் கையில் ஏந்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். 2006-க்குப் பிறகு உலகக் கோப்பை காலிறுதியில் போர்ச்சுகல் தகுதி பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.