கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 4-வது நாளன்று நடைபெற்ற 4 ஆட்டங்களில் ஜப்பான், ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. மொராக்கோ - குரோசியா இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தது.
4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி கால்பந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது ஜப்பான் அணி. தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை 24-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பைப் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018-லும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவிடம் வீழ்ந்தது ஜெர்மனி. ஆசிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்தி வருவதால் ரசிகர்களுக்கு ஆசிய அணிகள் மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், கோஸ்டா ரிக்காவை 7-0 என நொறுக்கியது. கனடாவை 1-0 என வீழ்த்தியது பெல்ஜியம்.
ஜெர்மனி - ஜப்பான்
பெல்ஜியம் - கனடா
ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா
மொராக்கோ - குரோசியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் 3 அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

கபினியில் நீர் திறப்பு 27,000 கன அடியாக அதிகரிப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



