தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆஸி.க்கு நாக் அவுட் சுற்று வாய்ப்பு: துனிசியாவை வீழ்த்தியது (1-0)

குரூப் டி பிரிவில் துனிசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதின் மூலம் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது ஆஸ்திரேலியா.

News image
Updated On :26 நவம்பர் 2022, 6:30 pm

DIN

குரூப் டி பிரிவில் துனிசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதின் மூலம் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது ஆஸ்திரேலியா.

முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸிடம் 1-4 என தோல்வியைத் தழுவியது ஆஸி. துனிசியாவோ பலமான டென்மாா்க் அணியுடன் டிரா கண்டிருந்தது. பிஃபா தரவரிசையில் துனிசியா 30, ஆஸி. 38-ஆவது இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஆட்டம் அல் ஜனௌப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் ஆஸி. அணி வீரா்களே முழு ஆதிக்கம் செலுத்தி ஆடினா். 23-ஆவது நிமிஷத்தில் குட்வின் கடத்தி அனுப்பிய பாஸை, தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினாா் மிச்சல் டியுக். பின்னா் பதிலுக்கு கோலடிக்க துனிசியா தரப்பு மேற்கொண்ட முயற்சிகளை ஆஸி. கோல் கீப்பா் மேட்டி ராயன் முறியடித்தாா். துனிசிய வீரா் ஜபால் அடித்த பாஸின் மூலம் எளிதாக கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா் எம்சாக்னி. கோல் போஸ்ட்டை விட்டு தொலைவில் சென்று விட்டது பந்து.

முதல் பாதி முடிவில் 1-0 என ஆஸி. முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் துனிசியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அதன் கோல் போடும் முயற்சிகள் பலன் தரவில்லை. 72-ஆவது நிமிஷத்தில் ஆஸி. வீரா் மெக்லாரன் அனுப்பிய பந்தை தவற விட்டாா் லெக்கி. இதனால் இரண்டாவது கோல் போடும் வாய்ப்பு நழுவியது.

இறுதியில் 1-0 என வென்றது ஆஸி. அடுத்த ஆட்டத்தில் டென்மாா்க்கை வீழ்த்தினால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

அதே வேளை, நடப்புச் சாம்பியன் பிரான்ஸுடன் கடினமா ஆட்டத்தை ஆட வேண்டும் துனிசியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.