கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிர் ஆசியக் கோப்பை: பாகிஸ்தானிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

News image

தீப்தி சர்மா

Updated On :7 அக்டோபர் 2022, 11:05 am

DIN

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வென்றது. தனது 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இரு அணிகளும் காமன்வெல்த் போட்டியில் மோதியபோது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா. இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மீண்டும் அணியில் இடம்பெற்றார். ஸ்னேக் ராணாவுக்குப் பதிலாக ராதா யாதவ் தேர்வானார். இந்த ஆட்டத்திலும் ஷெஃபாலி வர்மா இடம்பெறவில்லை. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. நிதா தர் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி இந்த இலக்கை எளிதாக விரட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தது. முதல் 5 விக்கெட்டுகளை 12.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு இழந்தது இந்திய அணி. இதனால் கடைசிக்கட்டத்தில் போராட வேண்டிய நிலைமை உருவானது. ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்குப் பயத்தை ஏற்படுத்தினார். ஆனால் இந்திய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் தோல்வியடைய நேரிட்டது. இந்திய அணி, 19.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நஷ்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸ், பவுண்டரி அருகே அபாரமாக கேட்சுகளைப் பிடித்தார். பலருடைய கடின உழைப்பால் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான் மகளிர் அணி. 

இதன்மூலம் மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக இந்தியாவைத் தோற்கடித்துள்ளது பாகிஸ்தான் அணி. இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் இந்தியா 11 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 3-வது முறையாகத் தோற்றுள்ளது இந்தியா. தாய்லாந்துக்கு எதிராக தோற்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசி வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.