மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பந்துவீச்சில் மிரட்டிய சாம் கரண்: 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான்

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 12:49 pm

DIN

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரதுல்லா ஷசாய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். இந்த இணை பெரிதாக ரன் சேர்க்கவில்லை. ஷசாய் 7 ரன்களிலும், ரஹமனுல்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, இப்ரஹீம் ஷத்ரன் மற்றும் உஸ்மான் கானி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இப்ரஹீம் 32 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நஜிபுல்லா 13 ரன்களிலும், கேப்டன் முகமது நபி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்வரிசையில் களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் ஏதும் குவிக்கவில்லை. அஸ்மதுல்லா 8 ரன்களிலும், ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தனர். 

இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.