பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் கேப்டனா? 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 10:10 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஐசிசி டி20 உலக கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது. டி20 உலக கோப்பை வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த தொடரில் ஷிகர் தவன் கேப்டனாக செயல்ப்டுவாரென பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் விவிஎஸ் லக்‌ஷ்மணன் பயிற்சியாளராக செயல்படுவாரென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் தென்னாப்பிரிவுக்காவுடன் தனது சொந்த மண்ணில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் விளையாட உள்ளது. 

முதல் டி20 போட்டி- செப்.23 (திருவனந்தபுரம்)
2வது டி20 -செப்.28  (குவஹாட்டி)
3வது டி20 - அக்.4 (இந்தோர்)

அக்.6 , அக் 9, அக். 11 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதில்தான் ஷிகர் தவான் தலைமையேற்று நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.