
காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இலங்கை கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பெரிதும் தடுமாறியது அனைவரும் அறிந்ததே. டி20 உலகக் கோப்பை அணியில் ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்கு காரணம்.
இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது:
நம்பர் 5இல் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இடது கை பேட்டர் என்பதால் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்திடம் மாறினார்கள். நம்பர் 4, 5 இடத்திற்கு யாரை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கிறது. ஜடேஜா இருந்த ஃபார்மிற்கு அவரை இந்த இடங்களில் பயன்படுத்தலாம். பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பான வீரர் ஜடேஜா இல்லாதது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய இழப்புதான்.
கே.எல். ராகுல், ரிஷப் பந்துடன் போட்டியா?: சஞ்சு சாம்சன் பதில்
ஜூனியர் உலக சாம்பியன் ஆன தமிழகத்தின் 12 வயது இளம்பரிதி
இந்திய ஏ அணி: புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!
‘சொந்த செலவில் மருத்துவம் பார்க்கிறார்...’- அஃப்ரிடி குற்றச்சாட்டு
மும்பை இந்தியன்ஸ்: தலைமை பயிற்சியாளரானார் மார்க் பெளச்சர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.