ஒன்டே தொடர்: முழுமையாக வென்றது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. 
ஒன்டே தொடர்: முழுமையாக வென்றது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. 

ஹராரேவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். 

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில், ஷுப்மன் கில் அசத்தலாக ஆடி 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 130 ரன்கள் விளாசினார். ஷிகர் தவன் 40, கேப்டன் கே.எல்.ராகுல் 30, இஷான் கிஷன் 50 ரன்கள் சேர்த்தனர். தீபக் ஹூடா 1, சஞ்சு சாம்சன் 15, அக்ஸர் படேல் 1, ஷர்துல் தாக்குர் 9 ரன்களுக்கு வெளியேற, இறுதியில் தீபக் சஹர் 1, குல்தீப் யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் இவான்ஸ் 5, விக்டர் நியாசி, லுக் ஜோங்வே ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் ஜிம்பாப்வே இன்னிங்ஸில் சிகந்தர் ராஸô 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் விளாசி முயற்சித்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் சேர்க்க, டகுட்வனாஷி காய்டானோ 13, இன்னசென்ட் கையா 6, டோனி மன்யோங்கா 15, கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 16, ரயைன் பர்ல் 8, லுக் ஜோங்வே 14, பிராட் இவான்ஸ் 28, விக்டர் நியாசி 0 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய பெüலிங்கில் அவேஷ் கான் 3, தீபக் சஹர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2, ஷர்துல் தாக்குர் 1 விக்கெட் கைப்பற்றினர். 

இந்தியா முதலிடம்

இத்துடன் நடப்பு ஆண்டில் அதிக ஒன் டே தொடர்களை (3) முற்றிலுமாகக் கைப்பற்றி (ஒயிட்வாஷ்) சாதனை படைத்திருக்கிறது இந்தியா. நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் 2 தொடர்களை ஒயிட்வாஷ் செய்து அடுத்த இடத்தில் இருக்கின்றன. 

சச்சின் சாதனையை முறியடித்த கில் 

இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் அடித்தது அவரது முதல் சர்வதேச ஒன் டே சதமாகும். அத்துடன், ஜிம்பாப்வேயில் நடைபெறும் ஒன் டே ஆட்டத்தில் அதிக ரன்கள் (130) அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார். முன்னதாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1998-இல் 127 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.ஹ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com