தமிழகம் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் பரபரப்பான முறையில் டிரா ஆகியுள்ளது.
தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 395 ரன்கள் எடுத்தது. கேப்டன் அகர்வால் 135 ரன்களும் மிகில் ஜெயிஸ்வால் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும் எடுத்தார்கள். சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் விக்னேஷ் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றது. 111.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 179, ஜெகதீசன் 116, பாபா அபரஜித் 115 ரன்கள் எடுத்தார்கள்.
ஹைதராபாத் அணி 2-வது இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தியாகராஜன் 69 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழக அணிக்கு 11 ஓவர்களில் 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கைச் சாத்தியமாக்கப் போராடினார்கள் தமிழக தொடக்க வீரர்களான ஜெகதீசனும் சாய் சுதர்சனும். சிக்ஸர் மழை பொழிந்தார்கள். 20 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சாய் சுதர்சன். ஜெகதீசன் 22 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் தமிழக அணியைக் கொண்டு சென்றார். எனினும் வெளிச்சமின்மை காரணமாக 7 ஓவர்களுடன் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். இதனால் ஆட்டம் டிரா ஆனது. தமிழக வீரர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். தமிழக அணி 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தமிழக அணி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
Related Article
கடைசி டெஸ்டில் விளையாடுவாரா?: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாகிஸ்தான் வீரர்!
விரைவாக சதமெடுத்த புஜாரா, ஷுப்மன் கில்: வங்கதேச அணிக்கு 513 ரன்கள் இலக்கு!
ச்சோ ஸ்வீட்: மைக்கை ஐஸ்கிரீமாக எண்ணிய மொராக்கோ வீரரின் மகன்! (விடியோ)
நான்கு மாதங்களில் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்த மனோஜ் பிரபாகர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்!

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்
படிப்பறிவில்லாத குஜராத் மக்கள்: கார்கே வருத்தம்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


