ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் ஆஸி. கேப்டன்
By DIN | Published On : 17th January 2022 04:04 PM | Last Updated : 17th January 2022 04:04 PM | அ+அ அ- |

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தன்னுடைய பெயரைத் தந்துள்ளதாக ஆஸி. டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதுபற்றி ஆஸி. டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:
தற்போதைய நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கக் கையெழுதிட்டுள்ளேன். ஏலத் தேதிக்கு முன்பு வரை போட்டியில் கலந்துகொள்வது பற்றி யோசிக்க நேரம் உள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதுதான் தற்போதைய திட்டம். இதுபற்றி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டேன். பணிச்சுமை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். ஐபிஎல்-லில் நிறைய பயணிக்க வேண்டியிருக்கும். சிலர் இதை நன்குச் சமாளிப்பார்கள். என்ன காரணத்துக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
ஐபிஎல் 2020 ஏலத்தில் கொல்கத்தா அணி பேட் கம்மின்ஸை ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு செய்தது. இதுவரை 37 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள கம்மின்ஸ், இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் பங்கேற்றார். எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.