உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா என்ன செய்யவேண்டும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா என்ன செய்யவேண்டும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணி மீதமுள்ள 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 3-ல் தோல்வியடைந்துள்ளது. 77 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி 8 டெஸ்டுகளில் 5-ல் வெற்றி பெற்று 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 7 டெஸ்டுகளில் 5-ல் வெற்றி பெற்று 60 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. சதவீதப் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 75, தெ.ஆ. 71, இந்தியா 58 என முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இந்திய அணி அடுத்த வருடம் இங்கிலாந்து லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமென்றால் மீதமுள்ள 6 டெஸ்டுகளில் 5-ல் வெற்றி பெறவேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்றுவிடும். 6 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுவிட்டால் இதர அணிகளின் முடிவுகளைக் கவனித்துப் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்திய அணி விளையாடவுள்ள டெஸ்டுகள்

1 vs இங்கிலாந்து
4 vs ஆஸ்திரேலியா
2 vs வங்கதேசம் 

கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com