விம்பிள்டன்: இந்திய வீரர்கள் தகுதிச்சுற்றில் தோல்வி

விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட இரு இந்திய வீரர்களும் தோல்வியடைந்துள்ளார்கள். 
ராம்குமார் (கோப்புப் படம்)
ராம்குமார் (கோப்புப் படம்)

விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட இரு இந்திய வீரர்களும் தோல்வியடைந்துள்ளார்கள். 

இந்த வருட விம்பிள்டன் போட்டி ஜூன் 27 அன்று தொடங்குகிறது.  விம்பிள்டன் போட்டியில் ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விம்பிள்டன் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் இந்த வருடம் எந்தவொரு இந்திய வீரரும் பங்கேற்கத் தகுதி பெறவில்லை. தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட இரு வீரர்களும் தோல்வியடைந்துள்ளார்கள்.

இந்தியாவின் நெ.1 வீரரும் தரவரிசையில் 172-வது இடத்தில் உள்ளவருமான ராம்குமார் ராமநாதன், தகுதிச்சுற்றுப் போட்டியின் முதல் சுற்றில் 7-5, 6-4 என செக் குடியரசின் கொப்ரிவாவிடம் தோற்றார். தரவரிசையில் 624-ம் இடத்தில் உள்ள இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, ஸ்பெயினின் மிரால்லஸிடம் 7-5, 6-1 என நேர் செட்களில் தோற்றார்.

மூத்த வீரர் ரோஹன் போபண்ணா இந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்துள்ளார். ராம்குமார், யுகி ஆகியோர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார்கள். இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ளும் ஒரே இந்தியராக சானியா மிர்சா உள்ளார். விம்பிள்டனில் மகளிர் இரட்டையர் பிரிவில் அவர் பங்கேற்கிறார். இந்த வருடத்துடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற அவர் முடிவெடுத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com