Enable Javscript for better performance
I would have looked an absolute idiot had we lost SA skipper Elgar- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இது மட்டும் சொதப்பியிருந்தால் நான் முட்டாளாகத் தெரிந்திருப்பேன்: தெ.ஆ. கேப்டன்

    By DIN  |   Published On : 01st March 2022 02:18 PM  |   Last Updated : 01st March 2022 02:18 PM  |  அ+அ அ-  |  

    elgar_left_nz_AP22060123563196xx

    எல்கர் (இடது)

     

    2-வது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் எல்கர்.

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைச் சமன் செய்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

    கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 133 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எர்வீ 108 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் 60, காலின் டி கிராண்ட்ஹோம் 120 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா 5 விக்கெட்டுகளையும் யான்சென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

    தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரீன் 136 ரன்களும் ரபாடா 47 ரன்களும் எடுத்தார்கள். இதனால் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 426 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணி 4-ம் நாள் முடிவில் 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. கான்வே 60 ரன்களுடனும் டாம் பிளெண்டல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 2-வது டெஸ்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்குக் கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 332 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 

    இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கான்வே 92, பிளெண்டல் 44 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா, யான்சென், மஹாராஹ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடைசி நாளில் 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. 

    2-வது டெஸ்டை 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் மகத்தான முறையில் விளையாடி ஜெயித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும் தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மேட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை தோல்வியடைந்ததேயில்லை. அந்தச் சாதனையை இந்தமுறையும் தக்கவைத்துள்ளது. 

    இந்நிலையில் டெஸ்ட் வெற்றி பற்றி தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கூறியதாவது:

    முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்கிற முடிவு நல்லவேளை சரியாக அமைந்துவிட்டது. ஒருவேளை தவறாகவும் போயிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நான் முட்டாளாகத் தெரிந்திருப்பேன். ஆனால் அணியின் நலனுக்காக எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பவன் நான். ஆடுகளம் நிதானமான தன்மை கொண்டதாகத் தெரிந்தது. ஆட்டம் செல்லச் செல்ல ஆடுகளம் வறண்டு, கால்தடங்கள் சுழற்பந்து வீச்சாளர் மஹாராஜுக்கு உதவியாக இருக்கும் என எண்ணினோம். கடைசியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது, சுழற்பந்து வீச்சாளரை விளையாட வைத்தது போன்ற முடிவுகள் சரியாக அமைந்தன. கடைசி நாளின் கடைசிப் பகுதியில் மழை வந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. விரைவில் மழை அகன்று விடும் எனத் தெரிந்தாலும் ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால் என்ன செய்வது என்றும் நினைக்கத் தோன்றியது என்று கூறியுள்ளார்.


    TAGS
    Elgar

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp