சென்னை செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி அறிவிப்பு

பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அணியின் ஆலோசகராகப் பணியாற்றவுள்ளார்.
சென்னை செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி அறிவிப்பு


சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போர்ச்சூழல் காரணமாக அப்போட்டி ரஷியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷியாவும் பெலாரஸும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் 8 முறை தங்கம் வென்றுள்ளது ரஷிய அணி. 

இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் பிரவீன் திப்சே அணியை வழிநடத்துவார். ஸ்ரீநாத், ஆர்பி ரமேஷ் ஆகியோர் ஆடவர் அணிக்கும் அபிஜித் குண்டே, ஸ்வப்னில் ஆகியோர் மகளிர் அணிக்கும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள். பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அணியின் ஆலோசகராகப் பணியாற்றவுள்ளார்.

2020-ல் இணையம் வழியாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரஷியாவும் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றன. 

ஆடவர் பிரிவு

அணி 1

1. விதித் சந்தோஷ் குஜ்ராத்தி
2. ஹரி கிருஷ்ணா
3. அர்ஜுன்
4. எஸ்.எல். நாராயணன்
5. சசிகிரண் கிருஷ்ணன்

அணி 2

1. நிஹல் சரின்
2. குகேஷ்
3. அதிபன்
4. பிரக்ஞானந்தா
5. சத்வனி ரனாக்

மகளிர் பிரிவு

அணி 1

1. கொனேரு ஹம்பி
2. ஹரிகா
3. ஆர். வைஷாலி
4. தானியா சச்தேவ்
5. குல்கர்ணி பக்தி

அணி 2

1. வந்திகா அகர்வால்
2. செளம்யா சுவாமிநாதன்
3. கோம்ஸ் மேரி ஆன்
4. பத்மினி 
5. திவ்யா தேஷ்முக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com