முகப்பு விளையாட்டு செய்திகள்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: அறிவிப்பு
By DIN | Published On : 14th May 2022 01:43 PM | Last Updated : 14th May 2022 01:43 PM | அ+அ அ- |

சென்னை நுங்கம்பாக்கத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓபன் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது அமைச்சர் மெய்யநாதன் மற்றொரு தகவலை அளித்து தமிழ்நாட்டி டென்னிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும். தமிழக டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் அதற்கான இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் சர்வதேசத் தரத்தில் புதுப்பிக்கப்படும் என மெய்யநாதன் இன்று கூறியுள்ளார். இதையடுத்து சென்னையில் அடுத்தடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.