சூப்பர் 12 சுற்றில் அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர்கள்!

சூப்பர் 12 சுற்றில் அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர்கள்!

சூப்பர் 12 சுற்றில் அதிரடியாக விளையாடி அதிக பேட்டிங் ஸ்டிரைக் கொண்ட வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்...

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

சூப்பர் 12 சுற்றில் அதிரடியாக விளையாடி அதிக பேட்டிங் ஸ்டிரைக் கொண்ட வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ். குறைந்தது 40 பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்களில் சூர்யகுமாருக்கு முதலிடமும் நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்கு 2-ம் இடமும் கிடைத்துள்ளன.

சூப்பர் 12 சுற்றில் அதிக பேட்டிங் ஸ்டிரைக் ரேட் (குறைந்தது 40 பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்கள்):

1. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 225 ரன்கள் -  193.96 ஸ்டிரைக் ரேட்
2. ஃபின் ஆலன் (நியூசிலாந்து) - 91 ரன்கள் -  189.58 ஸ்டிரைக் ரேட்
3. ஷதாப் கான் (பாகிஸ்தான்) - 78 ரன்கள் - 177.27 ஸ்டிரைக் ரேட்
4. ரூசோவ் (தென்னாப்பிரிக்கா) - 141 ரன்கள் - 169.87 ஸ்டிரைக் ரேட்
5. கிளென் பிளிப்ஸ் (நியூசிலாந்து) - 195 ரன்கள் - 163.86 ஸ்டிரைக் ரேட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com