டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் புதிய சாதனை!
Updated on
1 min read

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல வீரர் விராட் கோலி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையை இன்று படைத்தார் கோலி. 115 ஆட்டங்களில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 37 அரை சதங்கள். கோலியை விடவும் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள (148) ரோஹித் சர்மா, 3853 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 

சர்வதேச டி20: அதிக ரன்கள்

கோலி - 4008 ரன்கள்
ரோஹித் சர்மா - 3853 ரன்கள்
மார்டின் கப்தில் - 3531 ரன்கள்
பாபர் ஆஸம் - 3323 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com