சென்னையில் தோனி!
By DIN | Published On : 12th November 2022 03:05 PM | Last Updated : 12th November 2022 03:05 PM | அ+அ அ- |

படம் - twitter.com/ChennaiIPL
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி பங்கேற்றுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என். ரவி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சா் எல். முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியும் பங்கேற்றார்.
2023 ஐபிஎல் போட்டியிலும் தோனியே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது.