மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு இடைக்காலத் தடை!
By DIN | Published On : 08th October 2022 05:50 PM | Last Updated : 08th October 2022 05:50 PM | அ+அ அ- |

ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய மேற்கிந்தியத் தீவுகள் வீரருக்கு நான்கு ஆண்டுகள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே.இ. தீவுகள் வீரர் ஜான் கேம்பல், 20 டெஸ்டுகள், 6 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.
இந்நிலையில் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஜான் கேம்பலுக்கு நான்கு ஆண்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது ஜமைக்கா ஊக்கமருந்துத் தடுப்பு ஆணையம். கடந்த ஏப்ரலில் கிங்ஸ்டனில் உள்ள தனது வீட்டில் ரத்த மாதிரிகளை வழங்க கேம்பல் மறுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
A happy birthday to @windiescricket batter, John Campbell pic.twitter.com/YW7dQZhKR4
— ICC (@ICC) September 21, 2021