'கேள்வி கேட்பதற்கு முன்பு தரவுகளை சரிபார்க்க வேண்டும்...’ - ஷர்துல் தாக்குர் காட்டமான பதில்! 

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு காட்டமான பதிலளித்துள்ளார் ஷர்துல் தாக்குர்.  
ஷர்துல் தாக்குர்
ஷர்துல் தாக்குர்

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு காட்டமான பதிலளித்துள்ளார் ஷர்துல் தாக்குர்.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய முதல் ஒருநாள் போட்டியில்  9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இர்ண்டாவது போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் தோனி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அனைவருமே தோனியை மிஸ் செய்கிறோம். தோனி அவர்கள் 300க்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும் 90க்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த மாதிரி அனுபவுமுள்ள ஒரு வீரர் கிடைப்பது அரிது. நமது தலைமுறை அவருக்கு கீழ் விளையாடி இருக்கிறோம். அதனால் அவரை நிச்சயமாக மிஸ் செய்கிறோம். 

அடுத்து இந்திய பந்து வீச்சாளர்களின் நிலைத்தன்மை (கன்சிஸ்டன்சி) குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷர்துல், “இந்தியாவில் விளையாடினால் எந்த பந்துவீச்சாளர்களுமே அதிகமான ரன்களை வழங்குகின்றனர். அப்படி பார்த்தால் நம்மை விட தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சாளர்களே அதிகமான ரன்களை கொடுத்தார்கள். இருப்பினும் அந்த தொடரை நாம்தானே வென்றோம். கன்சிஸ்டன்சி குறித்து கேள்வி கேட்கும் முன்பு அந்த மைதானத்தின் தன்மை குறித்தும் ஆராய வேண்டும். அதிக ஆட்டங்களில் இந்திய அணி 350க்கும் மேல் ரன்கள் எடுத்துள்ளது. எதிரணியும் அதேயளவு ரன்களை எடுத்துள்ளது. போட்டி சம்மாகவே இருந்து வந்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் எப்போதுமே நல்ல பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். சில போட்டிகளைத் தவிர அதிகமான போட்டிகளில் நாம்தான் வென்றுள்ளோம். அதனால் அணியில் அதிக கன்சிஸ்டன்சி உள்ளதாகவே கருதுகிறேன்” எனக் கூறினார். 

மேலும், டி20 உலகக் கோப்பையில் தேர்வாகாவிட்டாலும் அடுத்துவரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் தேர்வாகும்படி உழைத்து வருகிறேன் என ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com