கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவற விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 2:10 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸுக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் தொடர்ந்து மீதமுள்ள நாள்களில் விளையாடினார். பந்துவீச்சில் பெரும் சிரமத்தை சந்திக்காவிட்டாலும், பேட்டிங்கின்போது அவர் சிரமப்பட்டதை பார்க்க முடிந்தது. இருப்பினும், அவரது இந்த காயம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

ஆஸ்திரேலிய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அதற்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடாத பட்சத்தில் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவை வழிநடத்தலாம் எனக் கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்குப் பின் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

இந்த இரு தொடர்களிலும்  பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.