வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:02 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன் தினம் (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் மற்றும் ஜெரால்டு கோட்டீஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் எடுத்தார். அதில் 28 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

 தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 163 ரன்கள் பின் தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்லைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 131 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தனி ஒருவனாகப் போராடிய விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் நண்ட்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 131 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.