நியூசிலாந்து டெஸ்டிலும் விரைவாக ரன்கள் எடுத்த இங்கிலாந்து பேட்டர்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்டிலும் விரைவாக ரன்கள் எடுத்த இங்கிலாந்து பேட்டர்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்துள்ளது.

மவுண்ட் மெளங்கனியில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணியில் டெஸ்டிலும் விரைவாக ரன்கள் எடுத்துப் புரட்சி செய்து வரும் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திலும் அதே பாணியைப் பின்பற்றியுள்ளது.

நியூசிலாந்தில் பேட்டர்கள் ரன்கள் எடுப்பதே சிரமம் என்கிற நிலையில் வழக்கம்போல வேகமாக ரன்கள் எடுத்து அசத்தினார்கள் இங்கிலாந்து பேட்டர்கள். பென் டக்கட் 68 பந்துகளில் 84 ரன்களும் ஹேரி புரூக் 81 பந்துகளில் 89 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி, 58.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் (ரன்ரேட் - 5.57) எடுத்து டிக்ளேர் செய்தது. நீல் வாக்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லா நியூசிலாந்து பந்துவீச்சாளர்களும் ஒரு ஓவருக்குக் குறைந்தது 4 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தார்கள்.

நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லதம், வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் ஆகிய வீரர்கள் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் ஆலி ராபின்சன் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com