இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மகளிர் உலகக் கோப்பை: பந்துவீச்சில் அசத்திய ரேனுகா சிங்; இந்தியாவுக்கு 152 ரன்கள் இலக்கு!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 2:59 pm

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று (பிப்ரவரி 18) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட் சிவர் பிரண்ட் அரைசதம் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் எமி ஜோன்ஸ் 40 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.