கவாஜா 195*, ஸ்மித் 104 ரன்கள்: 2-வது நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கவாஜா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மழை, வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
2-வது நாளில் ஆஸி. பேட்டர்களான கவாஜாவும் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடினார்கள். ஸ்மித் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 30-வது டெஸ்ட் சதம். 206 பந்துகளில் சதமடித்த கவாஜா, தொடர்ந்து நன்கு விளையாடினார். ஸ்மித்துக்குப் பிறகு டிராவிஸ் ஹெட், கவாஜாவுக்கு நல்ல இணையாக விளங்கினார். கவாஜா - ஸ்மித் கூட்டணி 209 ரன்களும் கவாஜா - ஹெட் கூட்டணி 112 ரன்களும் எடுத்தன. ஹெட் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195, ரென்ஷா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
Related Article
ஷங்கர் படத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்!
ஐபிஎல் போட்டியில் பந்துவீச மாட்டேனா?: பிரபல ஆஸி. வீரர் விளக்கம்!
ஆசியக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்!
டி20 தொடர்: சஞ்சு சாம்சன் விலகல், புதிய வீரர் தேர்வு!
இந்திய அணிக்குத் தேர்வான புதிய அதிரடி வீரர்: யார் இந்த ஜிதேஷ் சர்மா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.