ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொடர்ச்சியாக இரு சதங்கள்: தரவரிசையில் கோலி முன்னேற்றம்!

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த பிரபல பேட்டர் விராட் கோலி...

News image
Updated On :12 ஜனவரி 2023, 11:50 am

DIN

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த பிரபல பேட்டர் விராட் கோலி, ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 113 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார். இதற்கடுத்து விளையாடிய ஒருநாள் ஆட்டத்திலும் இலங்கைக்கு எதிராகச் சதமடித்தார். 

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. ரோஹித் சர்மா 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அடுத்த 4 இடங்களில் வான் டர் டுசென், இமாம் உல் ஹக், குயிண்டன் டி காக், வார்னர் ஆகியோர் உள்ளார்கள். இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் 15-வது இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.