நெ.1 பந்துவீச்சாளர்: சிராஜ் சாதனை!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நெ.1 பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார் இந்தியாவின் சிராஜ்.


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நெ.1 பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார் இந்தியாவின் சிராஜ்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில் 360 ரன்கள் எடுத்தார். சிராஜ் 2 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்நிலையில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் முதலிடத்தில் இருந்த டிரெண்ட் போல்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ். முதல்முறையாக இந்தப் பெருமையை அவர் பெற்றுள்ளார். கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் சிராஜ். தரவரிசையில் 2-ம் இடத்தில் ஜோஸ் ஹேசில்வுட்டும் 3-ம் இடத்தில் போல்ட்டும் உள்ளார்கள்.
பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளார் இளம் வீரர் ஷுப்மன் கில். ரோஹித் சர்மா 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தை பாகிஸ்தானின் பாபர் ஆஸம் தக்கவைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...