கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஹர்திக் பாண்டியா என்னை விட சிறப்பாக விளையாடுகிறார்: வெங்கடேஷ் ஐயர்

ஹர்திக் பாண்டியா தன்னைவிட சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் இடம்பிடிக்க கடினமாக உழைக்க வேண்டுமென வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஜூலை 2023, 6:44 am

DIN

இந்திய ஒருநாள் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜடேஜாவுக்கு அடுத்து ஹார்திக் பாண்டியாதான் எல்லோரது தேர்வும்.

2018இல் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 2022இல் காயம் குணமாகி விளையாட வந்தார். ஐபிஎல் போட்டியில் புதிய அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றார். 2023 ஐபில் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று சிஎஸ்கே அணியிடம் தோற்றார்.

இதற்கிடையில் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டராக ஐபிஎல் போட்டிகளில் மிளிர ஆரம்பித்தார். தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

ஹர்திக் பாண்டியா நல்ல திறமைசாலி. நான் இந்திய அணியில் இடம் பிடிக்க அவரைப் போல் சிறப்பாக விளையாட வேண்டும். இப்போது அவருக்கு அருகில் நான் இல்லை என்பதுதான் நேர்மையான உண்மை. ஆனால் நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.