தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்து துணைக் கேப்டன் விலகல்! 

பிரபல இங்கிலாந்து வீரர் ஆலி போப் காயம் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

News image
Updated On :4 ஜூலை 2023, 12:30 pm

DIN

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் 25 வயதான ஆலி போப் காயம் காரணமாக விலகியுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போப் 2136 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 11 அரைசதங்கள் அடங்கும். 

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின்போது தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தும் வலியுடனே போட்டியினை தொடர்ந்து விளையாடிய போப் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார். 

காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. அதனால் அவருக்கு பதிலாக டான் லாரன்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டான் லாரன்ஸ், கடந்த 4 டி20 பிளாஸ்ட் போட்டியில் 3 அரைசதம் அடித்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-0 என முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.