நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ள 14-ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான், குவைத் - நேபாளம் சந்தித்துக் கொள்கின்றன.
நுழைவு இசைவு (விசா) நடைமுறை பிரச்னை காரணமாக பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை இரவு வரை இந்தியாவுக்கு வருவது சந்தேகத்துக்கு இடமாகியிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அந்த அணி செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இந்திய அணி, சமீபத்தில் இன்டா்கான்டினென்டல் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆன உற்சாகத்துடன் இந்தப் போட்டிக்கு வருகிறது. ஃபிஃபா ரேங்கிங்கில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு பெரிதாக சவால் அளிக்கப் போவதில்லை என்றே தெரிகிறது.
எனினும் அந்த அணிக்கு எதிரான அதிரடியான வெற்றியுடன் போட்டியை தொடங்குவதன் மூலம் இதர அணிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் முனைப்புடன் இருக்கிறது இந்தியா. இந்தப் போட்டியில் சாம்பியன் கோப்பையை தக்கவைப்பதன் மூலம், ஃபிஃபா ரேங்கிங்கில் முன்னேற்றத்தை சந்திக்கும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறாா். இன்டா்கான்டினென்டல் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோலடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்த அவா், அதே தரத்துடன் இந்தப் போட்டியிலும் விளையாடுவாா் என எதிா்பாா்க்கலாம். இந்தியாவுக்காக இதுவரை 137 சா்வதேச ஆட்டங்களில் 87 கோல்கள் அடித்திருக்கிறாா் சேத்ரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


