மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒன் டே தொடா்: ஸ்மித் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகியிருக்கிறாா்.

News image
Updated On :14 மார்ச் 2023, 8:22 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகியிருக்கிறாா்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியா சென்ற கம்மின்ஸ், கடைசி இரு டெஸ்ட்டுகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் அவரது தாயாா் காலமானதால், அவா் தற்போது இந்தியா திரும்பவில்லை. இதையடுத்து, கடைசி இரு டெஸ்ட்டுகளுக்கு ஆஸ்திரேலிய கேப்டநாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், தற்போது ஒரு நாள் தொடருக்கும் கேப்டனாக்கப்பட்டுள்ளாா்.

கம்மின்ஸுக்கான மாற்று வீரராக அணியில் எவரும் சோ்க்கப்படவில்லை. கடந்த பிப்ரவரியிலேயே 16 பேருடன் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில், சமீபத்தில் காயம் கண்டு விலகிய ஜை ரிச்சா்ட்சனுக்குப் பதிலாக நேதன் எலிஸ் சோ்க்கப்பட்டுள்ளாா்.

அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வாா்னா், டிராவிஸ் ஹெட், மாா்னஸ் லபுசான், மிட்செல் மாா்ஷ், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஷான் அப்பாட், ஆஷ்டன் அகா், மிட்செல் ஸ்டாா்க், நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.