அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் தேர்வு

ஐபிஎல் 2023 போட்டிக்கான புதிய கேப்டனை அறிவித்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:28 am

DIN

ஐபிஎல் 2023 போட்டிக்கான புதிய கேப்டனை அறிவித்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம். மேலும் அணியின் இயக்குநராக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கார் விபத்தில் காயமடைந்ததால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பந்தால் ஐபிஎல் 2023 போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் நிலைமை தில்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் துணை கேப்டனாக இருந்த அக்‌ஷர் படேலுக்கு இந்த வருடமும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016-ல் சன்ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 அரை சதங்களுடன் 432 ரன்கள் எடுத்தார் வார்னர். 

மேலும், தில்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக பிசிசிஐயின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.