திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்: அணியில் மீண்டும் ஆடம் ஸாம்பா

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :5 மே 2023, 7:10 pm IST

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்  பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்கிறது. ராஜஸ்தான் அணியில் ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளனர். புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் குஜராத் அணியும், இன்றையப் போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் செல்லும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.