ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்: ப்ராவோவை சமன்செய்த சஹால்!  

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சஹால் பெற்றுள்ளார். 
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்: ப்ராவோவை சமன்செய்த சஹால்!  

8 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 32 வயதான இவர் 2022இல் ஊதா நிறத் தொப்பி (அதிக விக்கெட்டுகளுக்காக) விருது வாங்கினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மே.இ. தீவுகள் அணி வீரர் டிவைன் ப்ராவோ 183 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் 142 போட்டிகளில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 183 விக்கெட்டுகள் எடுத்து ப்ராவோவை சமன் செய்துள்ளார். 

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது. இருப்பினும் சஹால் அருமையாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் ப்ராவோவுடன் இணைந்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி மொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்: 

  1. யுஸ்வேந்திர சஹால்  -183 
  2. டிவைன் ப்ராவோ  - 183 
  3. பியூஷ் சாவ்லா   - 174 
  4. அமித் மிஸ்ரா  - 172 
  5. ரவிசந்திரன் அஸ்வின்  - 171 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com