காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியாக அமையவில்லை. 10 போட்டிகளில் விளையாடி இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், பிளே-ஆஃப் வாய்ப்பு சற்று கடினமான சூழலில் உள்ளது.
பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், பும்ரா, ரிச்சர்ட்சன் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால், பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.
இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராததால் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த 5 போட்டிகளிலும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, 9.50 சராசரியில் ரன்கள் கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் விளையாடாத நிலையில், வரும் ஆஷில் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரின் காயத்தின் தன்மையை கண்காணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மும்பை அணியில் இருந்து விலகி ஆர்ச்சர் நாடு திரும்புகிறார். இவருக்கு பதிலாக ஜோர்டன் மும்பை அணியில் இணைந்துள்ளார். இன்று பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோர்டன் இம்முறை மும்பை அணிக்காக களமிறங்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

