சிஎஸ்கே வெல்லுமா? கொல்கத்தாவுக்கு 145 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
சிஎஸ்கே வெல்லுமா? கொல்கத்தாவுக்கு 145 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 48 ரன்களையும், கான்வே 30 ரன்களையும் சேர்த்தனர். 

சென்னை சேப்பாக்கம் திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61வது ஐபிஎல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 

கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரஹானே 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆரம்பம் முதல் நிதானமாக ஆடிய கான்வே தாக்குர் வீசிய பந்தில் 30வது ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதற்கடுத்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராயுடு (4), மொயின் அலி (1), ஜடேஜா (20) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தூபே 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

20 முடிவில் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. 

கொல்கத்தா அணி சார்பில் வருண் சர்க்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வைபவ் அரோரா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com