கம்பீரை நோக்கி கோலி கோலி என கோஷமிட்ட ஹைதராபாத் ரசிகர்கள்: வைரல் விடியோ!
லக்னௌ அணிக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் ரசிகர்கள் கோலி கோலி என கோஷமிட்டனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மே 1ஆம் தேதி நடந்த போட்டியின் இரண்டாவது பாதியின் போது கோலி மற்றும் ஆப்கனை சேர்ந்த லக்னெள வீரர் நவீன்-உல்-ஹக் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்து வீரர்கள் கை குலுக்கும் போது மீண்டும் கோலி - நவீன் இடையே மோதல் ஏற்பட, லக்னெள ஆலோசகர் கம்பீர் குறுக்கிட்டார். தொடர்ந்து, கம்பீரும் கோலியும் மோதிக் கொண்ட நிலையில் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
கோலி-கம்பீர்-நவீன் இடையேயான பனிப்போர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வரும் நிலையில் நேற்றைய ஹைதராபாத் - லக்னௌ அணிகளுக்கு இடையேயான போட்டியில் 19வது ஓவரில் நோ பால் தொடர்பாக நடுவர்கள் தீர்ப்பு சர்ச்சையானதை தொடர்ந்து கம்பீரை நோக்கி ஹைதராபாத் ரசிகர்கள் கோலி கோலி என கோஷமிட்டனர்.
ஏற்கனவே பழைய போட்டியின்போது கம்பீரை நோக்கி கோலி என ஒரு ரசிகர் அழைக்க, கம்பீர் முறைத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...